மனத்தாயின் மழலைகள்
எல்லை தாண்டி பிரவேசிக்கும்

அடக்கமாகவும்
அத்துமீறியும்

மனம் குரங்கல்ல
மனம் ஒரு காற்று

தென்றலாகவும்
புயலாகவும்

வாயுமண்டலம் தாண்டியும்
வாழும்

நினைவுகள் படிவுகளை
மனத்தாயிடமிட்டே! முடிகின்றன

சில
மென்மையாகவும்
சில
அழுத்தமாகவும்

இவை
காலந்தாண்டியும் காட்டும்
கண்ணாடி போல

நொடிக்கு நூறாய் வந்தவைகளில்
வாழ்ந்துமிருக்கிறேன்
இறந்துமிருக்கிறேன்.


சின்னபாரதி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.