Sad Manஉன் விரல்களாய் என் கன்னங்களை
வருடுகின்றன என் வீட்டு மாமரக்கொழுந்துகள்
உன் இதழ்களாய் பூத்து சிரிக்கின்றன
என் வீட்டு செம்பருத்திகள்
குளித்து முடித்து ஈரம் சொட்டும் உன்
கூந்தலாய்ப் பொழிகிறது கார்முகில்
மேகம் கலைந்த வானத்தில்
உன் முகமாய் சிரிக்கிறது நிலா
பறிக்காமல் விட்ட அரளிப் பூ விதையாய்
கசக்கிறது உன் பிரிவு 

குமரேஷ் பொறையார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)


 

Comments

1 comment

1
kumar
nandru

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.