பிளிருகின்ற சத்தம் கேட்டால்
Manமதம் பிடித்த களிறொன்று
உலா வருவதுபோல்….
எலும்பு கூடாகிவிட்ட
சிலந்தி ஒன்று…
அன்று நெய்த ஒட்டடை
உலர்த்தி…
தன் முகம் மறைத்து…
ஒலிப்பான் வைத்து
பிளிறி கொண்டிருக்கிறது…
அய்யகோ!
கருநிற யானைக்கு
வெள்ளையடித்து!
வாகனத்திலேற்றி…
ஊர்வலமாய்
தேர்வலம்
கேவலமாய் அரங்கேறி
கொண்டிருந்தது!
தன் தும்பிக்கையால்
என் நம்பிக்கையை
தூக்கி கால் கீழே
நசுக்கி விட்டு
எனை தாண்டி சென்று
கொண்டிருந்தது
பிளிருகின்ற அலறல்
சப்தம்…!
நான் மௌனம் எனும்
ஜனநாயகத்தில்
யானையை மிதிக்க
பயின்று கொண்டிருக்கிறேன்… 

கிறுக்கன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.