
வேட்டையாடி
கொன்றன
சிங்கமல்லாத சிங்கங்கள்.
வேட்டையின் பலன்குறித்தும்
கிடைக்கும் நிம்மதி குறித்தும்
கூடிய விலங்குக் கூட்டங்களும்
கூட்டணிக் கூட்டங்களும்
குழப்பின
ஆங்காங்கே குளங்களை.
தின்றது போக
மீந்த உடல்கள்
நாறிப் புழுக்க
மூக்கில்லாத குழந்தைகளைப்
பெற்றெடுத்தன
விலங்குகள்.
அதனால்
புழுக்கள் பல்கிப்
பெருகின.
பகுதிப் பகுதியாக
பரவியவை
இந்தப் பாரெங்கும்
நிறைந்தன.
பிறகு
தின்பதற்கு ஏதுமில்லாததால்
ஒரு புழு மற்றொன்றைத்
தின்று
இறுதியில்
ஒரேப் புழுவானது.
அது பிறகு
நீலநிற பந்தொன்றையும்
தின்று தீர்த்தது.
- சாகிப்கிரான் (