Nightமனத்துள் வழியும் புழுக்கமாய்
படியத் துவங்குகிறது இருள்.....!

More articles by கா.ஆனந்தகுமார்

மனிதர் விலங்கெனப் பேதமற்று
மறுதலித்த உணர்வுகளில் ஊர்ந்து
மௌனத்தின் அதிர்வுகளால்
எவருக்குமற்ற பொழுதாக்கி நெய்யப்பட்ட
போர்வையென எங்கும் நீள்கிறது..

உணர்வற்ற உடல் கொண்டு
உயிர்வாழும் பரத்தையைப் போல்
கண்டுணரவியலா நிகழ்வுகளைப் புணர்ந்தபடி
காலத்தின் விரிவில்,
கழிவிரக்கமேதுமின்றி கேவியபடி
உறைகிறது இருள்.!

இருளின் துயரம்
எவரும் அறியாதது அதன்
வண்ணத்தைப் போலவே .....!!

கா. ஆனந்தகுமார் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.