இன்று முதல் முதலாக என்னை
அழைத்துச் சென்றனர் வெளியே
சூரிய வெளிச்சத்தில்.
வாழ்வில் முதன்முறையாக
திகைத்து நின்றேன்
வானம்
இவ்வளவு உயரம்
இத்தனை நீலம்
எத்தனை விரிவு !
பயபக்தியோடு உட்கார்ந்தேன்
தரையில் சம்மணமிட்டும்
முதுகை சுவற்றில் சாய்த்தும்.
இந்தக் கணத்தில்
வீழ்வதற்கு வலையொன்றும் இல்லை
போராட்டம் எதுவொன்றும் இல்லை
மனைவியும் இல்லை.
பூமியும் சூரியனும் நானும் தான்.
நான் மிக்க மகிழ்வோடிருக்கிறேன்.
மூலம் : Letters from a Man in Solitary, 1938
Nazim Hikmet.
- புதுவை ஞானம் (
கீற்றில் தேட...
இன்று ஞாயிற்றுக்கிழமை
- விவரங்கள்
- புதுவை ஞானம்
- பிரிவு: கவிதைகள்