'அய்யா' என்ற அவலக்குரல்
அவசரமாய் வாசல் வந்தேன்

கையில் குழந்தையோடும்
கண்கள் நிறைய பசியோடும்
Beggar Girl
தட்டு நிறைய எதிபார்ப்போடும்
சுட்டெரிக்கும் வெயிலில்
எட்டுவயது சிறுமி பிச்சை கேட்டு

"போ!போ!!" என உறைத்து
புறங்கையால் இல்லையென மறுத்து
உறத்து கதவடைத்து
உள்ளே திரும்பினேன்
உள்ளம் அதிர திடுக்கிட்டேன்

மூடிய கையில் பத்துபைசாவுடனும்
திறந்த கண்ணில் அதிர்ச்சியோடும்
எதுசரி என்ற குழப்பத்தோடும்
என்முகத்தில் எதையோ தேடியபடி
எதிரே என் குட்டிக் குழந்தை

ஒருநொடியில் உறைந்துபோனேன்
மறுநொடியே உடைந்தும் போனேன்
நல்ல அப்பா என் உருவத்தை
நானே கலைத்துவிட்டேனா?

குற்ற உணர்வில் மூழ்கிப்போனேன்
குழந்தைமுகம் பார்க்கவே இல்லை

பலவற்றை இழந்திருக்கிறேன்
வாழ்க்கையில்
பதறியதே இல்லை

பத்தே பைசாதான்
பல நாள்
தூங்கவே இல்லை.

துரை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It