எனக்கான தொடக்கத்தை
எங்கேயோ ஓர் விந்தணு
விரயம் செய்தது ..

எனக்கான தாலாட்டை
Sperm
எங்கேயோ ஓர் குயில்
கூவிசெல்கிறது...

எனக்கான சுவாசத்தை
எங்கேயோ ஓர் மரம்
சுத்திகரிக்கிறது...

எனக்கான தாகத்தை
எங்கேயோ ஓர் மழைத்துளி
தத்தெடுக்கிறது...

எனக்கான பயணத்திற்காக
எங்கேயோ தைக்கப்படுகின்றன
அனுபவசெருப்புகள்...

எனக்கான அறிவிற்காக
எங்கேயோ வளைக்கப்படுகிறது
ஓர் வினாக்குறியின் விளிம்பு...

எனக்கான காமத்திற்காக
எங்கேயோ உடைகிறது
ஓர் உதிரக்குடம்...

எனக்கான முடிவிற்காக
எங்கேயோ ஈடு செய்கிறது
இன்னொரு தொடக்கம்....

இதில்
எங்கே நான்.....?

விஜயகுமார் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Comments

1 comment

1
ஸ்ரீதர் ராஜசேகர்
பல நேரங்களில் நல்ல பதிவுகள் பினனூட்டமின்றி இருக்கும் போது நான் நினைப்பது உண்டு.பதிவிட்டவர் பின்னூட்டம் கருத்தில் கொண்டு இதை எழுதுவதில்லை என்று. எழுத்து எண்ணத்தின் பிரசவம். பிறர் கருத்துக்காக பிரசவங்கள் நடப்பதில்லை. ஆனால் பாராட்டுகள் தாய்க்கு சுகமே. அந்த எண்ணத்தோடு உங்களின் அக ஆராய்ச்சி மிக நன்றாக உணர்வோட்டமாக நானும் அனுபவித்திப்பதை எழுத்தாக பிரசவித்தூள்ளீர்கள். மிக அருமை நன்று. நன்றியுடன்
ஸ்ரீதர் ராஜசேகர்
[email protected]

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.