1)

தேவதைகள் நடைபயின்ற
இந்த வீதிகளில்
பிசாசுகளின் பிறாண்டல்களை இப்போது நீங்கள்
காணலாம்...
2)
அதோ
தென்னை மரம்
வயல் வெளிகள்
கட்டிடங்கள்
எல்லாமும் இருக்கின்றன
வேரறு விழுந்தபடியும்
கீறலாய் சிதைந்தபடியும்
3)
நேற்று
திருவிழா கலகலப்பு
இன்று
மயான அமைதி
நாளை
யாருக்குத்தெரியும்..?
4)
இளவேனில் காலம்
உதிர்ந்து போனது
இலையுதிர்காலம்
துளிர்த்துக்கொண்டேயிருக்கிறது
5)
ஊர் ஒதுக்குப்புறத்தில்
கல்லறை ஒன்று இருந்தது..
கல்லறைகளின் ஒதுக்குப்புறத்தில் ஊர் இருக்கிறது
6)
இலைகளில் தேன்துளிகள்
சருகுகளில் கண்ணீர்த்துளிகள்
7)
வரவேற்று விருந்தளித்தோம்
எச்சரித்து துரத்தப்பட்டோம்
8)
மாறாப்புன்னகை
மனசிலும் முகத்திலும்
ஆறாக்காயம்
உடலிலும் உணர்விலும்..
- நிந்தவூர் ஷிப்லி, தென்கிழக்கு பல்கலை, இலங்கை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.