Writing
அந்த மேசையின் மேல்
நேற்று
ஏற்றிவைத்த மெழுகுவர்த்தி
எரிந்தெரிந்து உருகிவிட்டது
கோப்பையிலிருக்கும் தேனீர்
ஆடைபடிந்து ஆறிவிட்டது
டிக்டிக்கித்துக்கொண்டிருந்த கடிகாரம்
சாவியின்றி நின்றுவிட்டது
மேலேயிருக்கும் காலதரின் வழியே
உட்புகுந்த ஒளிக்கற்றையின் பரவலில்
அறையில் படிந்திருக்கும்
தூசி தெரிகிறது
தூரத்தில் தொங்கும்
பூச்சுப்போன கண்ணாடிக்குள்
சிவந்து வீங்கிய கண்களோடு
என் முகம் தெரிகிறது
தொடைக்குக் கீழிருக்கும் கால்கள்
உணர்வற்றுவிட்டன
தூவலைப் பிடித்திருந்த விரல்களில்
தழும்புகள் விழுந்துவிட்டன
சொற்களைத் தேடித்தேடி
சேர்ந்த மூளை
களைத்துவிட்டது
எனினும்
இன்னும் அந்தக்கவிதை
எழுதப்படாமலேயே இருக்கிறது.
-யரலவழள இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.