உதறிச் செல்..

உதாசீனப்படுத்து..

எடுத்தெறி..

எதிர் நின்று கொல்..

ivalbharathi_ladyகைவிடு..

கடந்து போ..

விட்டொழி..

விரட்டியடி..

இத்தனைக்கும்

தாக்குபிடித்தால் பற்றிக் கொள்..

ஒருவேளை அந்த நேசம் உனக்காகவே

படைக்கப்பட்டிருக்கலாம்..

 

--------------

 

வேறெதிலும்

பதிய மறுக்கும் கவனம்

முழுமையும்

சுற்றி வருகிறதுன்னை..

கொஞ்சம்

ஆற்றுப்படுத்திச் செல்லேன்..

நானும்

என் நேசமும்

இம்மியளவேனும்

நலம் பெற..

 

-----------------

திட்டமிடப்படாத

பயணத்தில்

களைப்படுகிறது என் தேடல்..

 

வகைப்படுத்த இயலாத

முயற்சிகளின் எத்தனிப்புகள்

நின்றபாடில்லை..

 

தேற்றுதலில்லாத

உழைப்பின்

ஒவ்வொரு சொட்டும் உலர்கிறது..

 

உன்னுடனான பொழுதுகளில்

அனிச்சையாய்

எழுந்து மறைகிறது

ஒரு முடிவுக்கான சமரசமும்..

ஒரு தொடக்கத்திற்கான ஒப்பந்தமும்..

 

-----------------------------

 

அனுமதி

மறுக்கப்படும்

உன் தனிமைக்கு..

 

அனுமதித்தும்

ஆர்ப்பரிக்கும்

உன் அமைதி..

 

இரண்டுமற்ற பொழுதுகளில்

உன் நினைவிலறைந்து போகும்

எனது வார்த்தைகள்..

"பிறிதொரு ஜென்மம் இல்லை..

வாழ்ந்து விடலாம் இக்கணமே"

 

-     இவள் பாரதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

1 comment

1
Sahaana
புரிந்துகொள் நண்பா
மறக்க நினைக்கும்
பல விடயங்கள்
அடிக்கடி விரட்டிக் கொள்கிறது என்னை
அதில் நீயும் ஒருவன்

காதலின் உணர்வு தெரியுமா
உனக்கென்றாய்
பாவம் நீ எங்கே தெரியப்போகிறது
என் காதலின் அஸ்தமனத்தை

புரியாத என் உணர்வுகளை
தினமும் சீண்டிப் பார்க்கிறாய்
உன் எஸ் எம் எஸ்கள் மூலமாக

விளையாட்டுப் பிள்ளையென
ஒதுங்கித்தான் பார்க்கின்றேன்
நீயுமோ விட்டபாடில்லை

வெளிநாட்டு கலாசாரத்தில்
மூழ்கிய உன்னிடம்
என் கிராமத்து உணர்வுகளை
புரிய வைக்க முடியவில்லை

பெறுமதியான வார்த்தைகளை
இலகுவாக சிந்திவிடுகிறாய்
அள்ளுவது நான் என்பது தெரிந்தும்

என்னவனின் நினைவுகளால்
துவள்கின்ற நேரத்திலும்
போட்டிடுவாய் எஸ் எம் எஸ்களை
அவனைப்போன்றே

விம்மியழ முடியவில்லை
பக்கத்தில் அம்மா
பொத்திக்கொள்கிறேன் நெஞ்சை

புரியாது உனக்கு
காதலின் வலியது
நிறுத்திக்கொள் என்றால்
சிரித்துக்கொள்கிறாயடா

இனியும் தாங்காது
இச்சின்னவளின் இதயம்
முடிந்தால் புரிந்துகொள் நண்பா

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.