girl_301மஞ்சள் உதிர்த்த வெயிலொன்றில்
அதிசய வடிவங்கள் நீட்டும்
நிழலை வரைகிறாள்
சுவரில்
ஒரு சிறுமி

மணல் கிளறி
குழிப்பறித்து
தன் பகல்களைப் புதைத்து
வாசல் படியில் காத்திருக்கிறாள்

வருவோர் போவோர் அசைவுகளை
சலிப்போடு
நோட்டில் கிறுக்குகிறாள்

அப்பாவும் அம்மாவும்
ஆபிசிலிருந்து வீடு திரும்பிய போது..

அவளுடன் சேர்ந்து
ஒரு பூனைக்குட்டி
ஒரு மரம்
ஒரு சைக்கிள்
ஒரு பூ
மற்றுமொரு கப்பல்
காத்திருந்தது..

- இளங்கோ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

2 comments

2
இராசகம்பிரத்தான்
மிகவும் உயிரோட்டம் உள்ள கவிதை. வாழ்த்துகள்.
Guna
Nice

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.