யாருக்கும் தெரிந்து விடாத
முகம் மாட்டிக் கொள்கிறார்களோ
தெரிந்தவர்கள் ஒருபோதும்
காணக் கிடைப்பதில்லை
ஓடுடைந்த அவ்வுயிர்களுக்கு
வாழ்வென்பது
பசித்த பொழுதுகள் தான்
சாலையோரம் கிடக்கும்
அவர்களுக்கு
உடலே வீடு
உயிரே சொந்தம்
வெட்கம் அவிழ
நீண்டு விடும் கைகளில்
ஒப்புக்கொடுத்தலின் நிம்மதி
காசு போடும் நாளில் புரிகிறது
மனிதர்களை
இறைவனாக்கத் தெரிந்தவர்கள்
யாசிப்பவர்கள்

- கவிஜி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.