எல்லா உரையாடல்களையும்
‘அப்புறம் பேசுகிறேன்’ என்று
முடித்துவைப்பாள்.
அப்புறம் தவறாமல் அவளாகவே திரும்புவாள்.

ஒரு அப்புறத்துக்கும் இன்னொரு அப்புறத்துக்குமிடையே
வார்த்தைகளை மட்டும்
அசைபோட்டு அசைபோட்டு நிரப்பும் பழக்கத்தை
எனக்கு ஊட்டி வைத்திருந்தாள்.

கல்லூரி முடிந்த நாள்.
ரயில் கிளம்பும் நேரம்.
இரண்டு முறை சொன்னாள்:
‘அப்புறம் பேசுகிறேன்.’

வண்டி இரைச்சலில்
கேட்காது என இரண்டாவது முறை
'அப்புறம்' அவள்
சொன்னதாக நினைத்தேன்.

இடை வார்த்தைகளை
அசைபோட்டு அசைபோட்டு
நெஞ்சு வலிக்கத் தொடங்கியபோதுதான் புரிந்தது—
இரண்டு அப்புறங்களையும்
பதற்றத்தோடு என்னிடமே விட்டுச் சென்றுவிட்டாள்.

மற்றபடி அவள் எப்போதும்
நேர்மையான அறிவாளி.

இப்போது தெரிகிறது:
அப்புறம் என்று இனி
எப்போதும் இல்லை.

- அ.சீனிவாசன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.