1.

எல்லோரும் சந்தோசமாக
இருக்கும் இடத்தில்
மறைந்துள்ள ஏதோவொரு
சோகம் கண்ணில் படுகிறது.

சோக வீட்டிலும்
ஏதோவொரு உற்சாகம்
மனதினுள் புகுகிறது.

இடம் பொருள் ஏவல்
அறியாது
கவிதை மனம்
அதிகப்படியான
கவலையை நீர்த்துவிடுகிறது.

குறைவான மகிழ்ச்சியை
கெட்டிப்படுத்துகிறது.

குழந்தையும் கவிஞனும்
குணத்தால் ஒன்றென
ஒத்துக்கொள்வது தெய்வக் குற்றமோ??

2.

உங்களைப் போல்
சந்தோசமாய் இருப்பது எப்படியென
பாடிக் கொண்டிருந்த
பறவையிடம் கேட்டேன்.

சந்தோசமாய் இருப்பது எப்படியென
எங்களைப் போலவே
யோசிக்காமல் இரு
என்றவாறே அகன்றது.

- அ.சீனிவாசன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.