கீற்றில் தேட...

குண்டு குழி
வாசலில்
நிலக் கூடுகள்

*
வாசல்
தேங்கிய நீரில்
நிலா கூடு

*
கூடு திரும்பும் பறவை
சிறகளவு வானம்
கொண்டு வந்திருக்கிறது

*
இலை அத்தனையும் விழுந்தாலும்
கோட்டோவியமாய்
கூடு பாயும் மரம்

*
ஆயிரம் போதிகள்
இருக்கலாம்
ஒரு புத்தன்தான் ஜோதி

*
இலையற்ற மரத்திலும்
இசைக்க மறுப்பதில்லை
பறவைகள்

*
ஒட்டி உரசிக்கொள்ளும்
இருவேறு கிளைகள்
மரத்தடியே காதலர்கள்

*
பிடித்த ஒரு வரி செய்யும்
ஓரியாட்டம் தான்
அந்த முழுக்கவிதையும்

*
அடுத்த பத்தடி
நடக்கச் செய்யுமானால்
கானலும் கருணையே

*
இத்தனை சுத்தம் ஆகாது
புகைப்படம் எடுத்த மறுநொடியே
தலை முங்கி எழுகிறது நீர்ப் பறவை

- கவிஜி