ஒரு நெடுமழை நாளில் தான்
நீ தேம்பித் தேம்பி அழுதது
மழையில் நனைந்த இரவு
திரவ வடிவமெடுத்து
தெருவெங்கும் ஓடியது
பிசுபிசுப்பாக

இத்தனை நாட்களுக்குப் பிறகு
சிறுதூறலுக்கு சிலிர்க்கும்
நினைவுகளைப் பார்க்கும் போது தான்
அன்று நீ அழுதது எனக்குப் புரிகிறது

ஒரு நினைவாகி
விடுவதற்குத்தானோ
மனிதர்கள்
கண்ணீர் சிந்துவது என்று தான்
முதலில் நினைத்தேன்

ஆனால் நினைவில்
உயிர்த்தெழுவதற்கு என்று
இப்போது கண்டு கொண்டேன்

ஒரு சின்னஞ்சிறிய மனதால்
எத்தனை சுமக்க முடிகிறது!

கடலை அலையை பொழுதை
மலையை நதியை மணலை
வாழ்வை மரணத்தை என்று
ஒரு சிறிய பிரிவைத் தவிர

- தங்கேஸ்

More articles by தங்கேஸ்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.