என் உலகை
உங்கள் சாவிகள்
ஒருபோதும் திறக்காது
அது மலை சூழ் கதவு
அருவிகள் செய்பவன் நான்
உங்கள் கேள்விகள்
என்னை நனைப்பதில்லை
காடுகள் மரங்களோடு
கடவுளையும் வளர்க்க
தெரிந்தவன் நான்
உங்கள் பிரார்த்தனைகள்
உதவாது
மாயங்களில் இருந்தும்
என் தத்துவம் புல் வளர்க்கும்
உங்கள் ஒப்பனை
ஒவ்வாமை
காரணமற்ற எனக்கு
கவிதைக்காரன் என்றும்
பெயருண்டு
எழுதிக் காட்டவா
ஒரு காட்டாறு....!

- கவிஜி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.