அவள் இல்லாத இடம் ஏது
கதவு திறந்தால்
ஜன்னல் திறந்தால்
வீடு திறந்தால்
வீதி திறந்தால்
ஊர் திறந்தால்
உலகம் திறந்தால்
வானம் திறந்தால்
அதற்கு மேலும் திறந்தால்
எங்கும் அவளே
சரி அத்தனையும் மூடினால்
அப்போதும் இருக்கிறாள்
திறவாத உள்ளங்கைக்குள்
இல்லாத இருத்தல் அது
*
கோயில் வரிசையில்
காசு நீட்டி
கை கூப்பும்
முந்திரிக் கொட்டைகளுக்கு
ஒருபோதும்
மூஞ்சைக் காட்டாது
புத்தியுள்ள சாமி
*
ஒதுக்கு
அடக்கு
தள்ளி வை
ஏளனம் செய்
மட்டம் தட்டு
மதியாதே
சூரியன் வராமலா போகும்
- கவிஜி