கீற்றில் தேட...

சிறகுலர்த்தும்
கரிச்சான் அலகில்
ஒட்டியிருக்கிறது
நேற்றைய மழையின் குளிர்.
கள்ளத்தனமாய் நின் காதோரம்
ஆடும் Black Metal ஜிமிக்கி
அவ்வப்போது என்னிடம்
ஜாடையாய் ஏதோ பேசுகிறது.
எதிர்பாராத உனது பார்வை போல
அவ்வப்போது சுள்ளெனத் தாக்கி
ஓடி ஒளிகிறது
மழைக்கால வெயில்.
கருக்கல் விலக்கி
மூடியும் திறந்தும்
இளவெயில் எட்டிப் பார்க்கிறது.
எதைக் கண்டோ
ஓயாது கீச்சிடும் அணிலாய்
உன் நினைவில்
கீச்சிடுகிறது மனது.
நீ என்பதே
எனக்கு மழைக்காலம் தானடி

- சதீஷ் குமரன்