கலவரத்தில் கைவிடப்பட்ட
சாமியின் தேரை
நடுவீதியில் இழுத்தபடி
இரவும் நிலவும்
விளையாடிக் கொண்டிருக்கிறது
தெருவின் பெயர் தெரியாமல்.
தீக்கு இரையாகிக் கிடக்கும்
குடிசையில் அணையாமல்
கனன்று கொண்டிருக்கும்
நெருப்பைக் கொண்டு
ஊர் எல்லைச்சாமிக்கு
தூபம் போடுகின்றனர்.
குபுகுபுவென
மேலெழும் புகையில்
ரத்தக் கவுச்சியை விடவும்
நெஞ்சை அடைக்கிறது
துர்சாதிய வாடை குதம்பாய்.
- சதீஷ் குமரன்