கீற்றில் தேட...

பொதுவெளியில்
புளிச்ச பூவாக்குவது
நண்பர்கள் முன்
நையாண்டி செய்வது
உறவுகள் மத்தியில்
உதறி விடுவது
பிள்ளைகள் முன்
விட்டுக் கொடுத்து பேசுவது
கவிதையில் கலாய்ப்பது
மேடைப்பேச்சில்
காமெடியாக்குவது
குடிக்கையில் அழைத்தால்
நச்சு என்பது
டூரில் இருக்கையில்
ரெண்டு நாளைக்கு
தலைவலி விட்டுச்சு என்பது
வாய்ப்பு கிட்டும் போதெல்லாம்
மரியாதை மருந்துக்கும்
இல்லை எனக் காட்டுவது
மானங்கெட்ட புருஷா
மத்ததுக்கு மட்டும்
பொண்டாட்டி என்பதா

- யுத்தன்