வெகு சீக்கிரத்தில்
உள் சென்று விடும் எனக்கு
வெளியே திரிவது தான் சிரமம்

என்ன பார்க்கிறாய்

காற்றின் கை பிடிக்கும் போது
கண்கள் பனிக்கும்
கவனித்திருக்கிறாயா

கூறுள்ள கவிதைக்கு
கவலை என்ன
வானம் மேயும் வெளிச்சத்துக்கே
தவ வலிமை

கேட்கிறதா

நல் மழைக்கு காத்திருக்கும்
உன்மத்த தவளையின்
பாடுபொருள் என்னவோ

இன்னொன்றும் சொல்கிறேன் கேள்

கவனச் சிதறல் தான்
கவனத்தோடு செய்ய வேண்டியவை
கவனத்துக்கு அமைதி போதும்

- கவிஜி

Pin It