கீற்றில் தேட...

tree 503குறும்பேச்சு
பேசியபடி
கிளைகளைக் கொத்தியும்
சுரண்டியும் கழிவு பூசியும்
கூத்தடித்துக் கொண்டிருந்தன குருவிகள்
வானத்துடன் பேசியபடி
வளர்ந்து கொண்டிருந்தது
மரம்.

- செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி