குழந்தைகளின் பஞ்சுமிட்டாய்
விரல் பிடித்து
கண்ணாமூச்சி ஆட முடியாமலும்
பறந்து செல்லும்
பலூன்களோடு தொலைந்து போகவும்
குச்சி ஐஸ் குச்சி மிட்டாய்
வாய்ஒழுகி சட்டை நனைய
சப்பி உறிஞ்சி
சுவைக்க ஆசைப்பட்டு
தெருவில் ஓடிப் பிடித்து
விளையாடும் சிறுவர்களோடு
சேரக்கூடாதென்று
புத்தாடை அணிவித்து
அலங்கார சொலிப்பில் இருந்தபோதும்
தெருவில் இறங்க வழியின்றி
கட்டி வைத்திருக்கிறார்கள்
உலகநாதனையும் உமையாளையும்
அவர்களின்
மனம் குமுறி
வெடிக்கிறது திருவிழாக்களில்
வானவெடியாய்
வண்ணப் பட்டாசுகள்..

- சதீஷ் குமரன்

Pin It