இருவருக்கும் பொது தான்
இசையும் இசைக்க மறந்த
தருணமும்
கனமும் கவனித்த
கருணையும்
அனலும் அற்புதமும்
ஆசையும் அதன் நிறமும்
கண்களின் வழியே
கூடு களைய நினைக்கும்
உள்ளாடை குறித்த தவிப்பும்
குடம் குடமாய் சொட்டும்
தவித்த ஓடைகளின் வழியே
நிழலாடும் நிஜமும்
மின்விசிறி
ஜன்னல் திரை
கதவு முதுகு
எல்லாம் எல்லாம்
காணும் பதற்றம் உள்பட
தன் வீடு தன் அறை
தன் உரை எனினும்
ஒவ்வொரு முறையும்
புது புணரல் அன்றோ...!

- கவிஜி

Pin It