எலி கரண்டிய தலையில்
புத்தியற்ற புலி வேஷம்
நேர் கொண்ட பார்வை
துளியும் இல்லை
நெற்றியில் மட்டும்
நாலைந்து கண்கள்
நிமிர்ந்த நன்னடை என்ற
உடல் மொழி இல்லவே இல்லை
புறங்கை புறமுதுகு
கழுத்தோரம் தோள்பட்டை என
கண்றாவியாய் டாட்டூ வீச்சம்
எதிர்த்து பேசுதல் இயல்பாகி விட்டது
படிக்கும் பழக்கமில்லை
புத்தக சுமை சுகம் அறியா
சுந்தரர்கள்
சொப்பனத்திலேயே இருக்கிறார்கள்
எதற்கும் கவலையில்லை
நெகிழும் கண்ணீருமில்லை
காதலுக்கு மரியாதை
இல்லவே இல்லை
நாட்டுக்கு செத்தவனையும் தெரியாது
வீட்டுக்கு சாகிறவனையும் புரியாது
டேக் இட் ஈஸியை
இத்தனை தாழ்த்தியிருக்க வேண்டாம்
எதற்கும் அஞ்சுவதில்லை
மட்டு மரியாதை அற்ற முகத்தில்
கம்பளிப் பூச்சி ஒப்பனைகள் வேறு
மீம்ஸ்களின் வழியே
மின்னல் முரளி ஆக நினைப்பது
கவலைக்குரியது
வாத்தியாருக்கு வணக்கமா
அப்படி என்றால்
மூடிட்டுப் போ பொது மொழி
சுயமி தான் முவ்வேளையும்
சைட் டிஷ்
மன்னிக்கவும் விதி விலக்குகள்
2 கே கிட்ஸ்கள் சோம்பிகளை
செய்து கொண்டிருக்கிறார்களோ
மறுபடியும் மன்னிக்கவும்
விதி விலக்குகள்.....!

- கவிஜி

Pin It