காலப்புரவியின் மீது
தாவியமர்ந்து
பயணம் மேற்கொள்ள
யத்தனிக்கிறேன்
நினைவுகளின்வழி
நழுவுகிறது பிடி
பின்னங்கால் உதைவலி
பிடறியில் தெறிக்கிறது
நினைவுச்சேறில்
உழப்பிக் கொண்டிருக்கும்
என்னைத் தவிர்த்துவிட்டு
காலப்புரவி
சிலிப்பிக் கொண்டு
முன்னேறிச் செல்கிறது

- பா.சிவகுமார்

Pin It