உடல் கூட்டும் மேகத்தில்
கிட்டத்தட்ட சிறகு
நகர்ந்த போதும்
நானில்லை
என்கிறது வானம்
சரிவிலிருந்து எழும் பூமி
மழை நாளில்
மாற்றி யோசிக்கிறது
துளி வெளிச்சம்
குடைகளின் கீழே
பட்டாம்பூச்சி நடை
பாவாடைக்காரிகள்
தலைகீழ் பஞ்சுமிட்டாய்
தானுருகி தவம் நீங்கும்
மின்மினிக் கூட்டங்கள் மத்தியில்
மஞ்சள் பேருந்தெல்லாம்
மழைக்கென்றே பூத்தவை
மணிக்கணக்காய் காத்திருக்கிறேன்
மழை வலுக்கட்டும்
வீடு வரை அழ வேண்டும்

- கவிஜி

Pin It