நேற்றிரவே நான் இறந்து விட்டேன்.
என்னுடன் அமர்ந்து பேசாதவர்கள் எல்லாம்,
என்னைச் சுற்றி அமர்ந்து கொண்டார்கள்.
பசியால் நான் சுருண்டு கிடந்து இருப்பேன்,
இன்று அழுது கொண்டு துக்கம் அனுஷ்டிக்கிறார்கள்.
என் விலாசம் அறியாதவர்கள் கூட,
இன்று என் வீட்டு வாசலில் கூட்டமாய் நிற்கிறார்கள்.
கைக்குட்டை கூட வாங்கித் தராதவர்கள்,
கோடித் துணி போர்த்துகிறார்கள்.
எதிர் வரும்போது முகம் திருப்பியவர்கள்,
இன்று ரோஜா மாலை அணிவிக்கிறார்கள்.
தடுக்கி விழுந்த போது தூக்க யாருமில்லை,
இன்று உலகத்தார் யாரோ நால்வர்
என்னைத் தூக்கிச் செல்கிறார்கள்.
இன்று தான் அறிந்து கொண்டேன்
மரணம், வாழ்வை விட மேலானதென்று.

- மு.தனஞ்செழியன்

Comments

3 comments

3
இரா.செல்லப்பாண்டி
இறந்தவர் பேசுவது போல் இருந்த உங்கள் கவிதை மிகவும் அருமை .
இந்த சூழலை எனது தந்தையின் இழப்பில் அனுபவப்பட்டிருக்கிறேன்.
விசேஷங்களில் விலகிச் சென்றவர்கள் என் தந்தையின் மரணத்திற்கு மாலை அணிவிக்கும் போது கிடைத்த அனுபவங்கள் பல
M.paramadayalan, Pondicherry
சமூகத்தில் வாழையடி வாழையாக நடந்துகொண்டிருக்கும் நிதர்சனமான உண்மையை சொல்லிய விதம் அருமை
தோழர். மேலும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்.
உமையொருபாகன் கந்தசாமி ராஜா
மனிதனின் மன வேதனையையும் இன்றைய மக்களின் இயல்பையும் மிக எளிமையாக கூறி விட்டீர்கள்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.