எதிர் இருக்கையில்
அமர்கிறான்,
என்னிருக்கையில்
அனலடிக்கிறது...

மீண்டுமொருமுறை
வேண்டாமென்றிருந்த சந்திப்பு
கணத்தில் நிகழ்ந்து விடுகையில்,
தேக்கி வைத்த
வன்மம் திரட்டி,
வசைமொழிகள்
ஆய்ந்தெடுத்து,
நியூரான்களுக்கு
துரோகத்தின்
ஆடையணிவித்து
எப்படியேனும்
ஏளனம் செய்துவிட
நினைக்கிறேன்...

"சார் டீ ரெடி"

கடைக்காரரின்
குரலுக்கு எழுந்துபோய்
தேநீர் வாங்கி
என்னிடத்தில்
புன்னகையோடு நீட்டுகிறான்...

காயங்களை
ஆற்றத் தொடங்குகிறது
சூடான தேநீர்.

- கார்த்திகா

Pin It