காடும் மழையும்
காலங்களின் மொழிபெயர்ப்பு
பூமி சக்கரத்துக்கு
சக்கரையிடும் சாகசம் பறவையின நுட்பம்
விலங்கின் கால் படும் இடமெல்லாம்
நிலத்தின் மடிகளில் நீர் சுரக்கும்
மூக்குத்தி மின்னும் புல்வெளிகள்
மூங்கில் அசைவுகளின் முணுமுணுப்பு
ஆறு நதி குளம் குட்டை என நீளும் வனம்
தலைகீழ் வான நீலம் கருநீலம்
ஒற்றையடியில் பழகாத பாதங்கள் காண்
சத்தமில்லாமல் காடலையும் காதுகள் கேள்
யானை வளர்த்தலை மறக்கட்டும் மானுடம்
ஞானம் பிறந்திட துளிர்க்கட்டும் காடினம்
புல்லினங்கள் இல்லையெனில்
ஓடை இல்லை மறவாதே
மானினங்கள் பெருகி விட்டால்
மழைத் துளிகள் உருளாதே
இருள் வேண்டும் பகல் வேண்டும்
நிலவொளியும் மரங்களிடையே புக வேண்டும்
புலி வேண்டும் அதன் வளம் வேண்டும்
காடென்னும் கை ஒங்க
ஆங்காங்கே புதர் வேண்டும்
மழை தரும் காட்டை ஒளிர்ந்திட விடு
மரமெல்லாம் சாமி
நெடுஞ்சாண் கிடையாக விழு

- கவிஜி

Pin It