இருளைத் திறந்துவிட்டு
அக்குள் நுகர காத்திருக்கிறாள் முதிர்கன்னி
அவசரத்தில் வீசப்பட்ட ஆடைகள்
கண்பொத்திக் கொள்ள
நிர்வாணத்தை உசுப்பி விட்டு
அமரச் சொல்கிறாள்
தேக்கங்களைத் தேடுவது எளிதென்றபடி
ஓடுகிறது விவரமறிந்த விரகப்பொறிகள்
சல்லாபிக்கும் இருவருக்கும் இடையே
மூச்சிறைத்து நிற்கிறது காலம்
கொதித்துப் பாயும் பருவத்தின்
நானூறாவது ஹார்மோன் எங்கிருந்து புறப்பட்டது
என்பதை பாதரசம் போன நிலைக்கண்ணாடி
ஒருவேளை பார்த்திருக்கலாம்...

- சாய்வைஷ்ணவி

Pin It