பயங்கரமாக கருத்து சீவிக் கொள்வோம்
வடகொரிய தென்கொரிய
முகம் வந்து போகும்
அவரவர் சாக்கடையை
அரிதாரத்தோடு கொட்டுவோம்
புடுங்கித்தனத்தோடு தான்
மூன்றாவது ரவுண்ட் ஆரம்பிக்கும்
மாவோவாவான் அவன்
சேகுவேரா ஆவேன் நான்
மாற்றத்தை கருங்காப்பி நிறத்திலிருந்து
கண்டெடுப்போம்
மாறி மாறி உமிழ்ந்து கொண்டு
சனி ஏற்றுவோம்
சரித்திரத்தில் பெயர் பொறிக்க
சிப்ஸ் கொறித்துக் கொள்வோம்
ஆழமான புரிதல் என்று
சும்மானாச்சுக்கு கண் கலங்குவோம்
வெட்கமே இல்லாமல் புதிதாக
குடிக்க வந்தவனிடம்
மாற்றி மாற்றி ஊற்றுவோம்
என் தளபதிடா
என் இன்னொரு கண்ணுடா
கடைசி கோட்டரிலும்
கடைக்கண் அளவு பார்க்கும் கண்றாவி
ஒரிஜினாலிட்டி மைண்ட்
நாளை புடுங்குவதாகச் சொன்ன
களைகளை அடுத்த சிக்னலில் மறந்திருப்போம்
வீடு வர வரவே
கவிழ்ந்து போகும் நட்பை
இனி அடுத்த வாரம்
சனிக்கோப்பை தான் நிமிர்த்தும்
அதுவரை மானங்கெட்ட 'நான்' போதைக்கு
தெரியவே தெரியாது
எவன் மனிதன்
எவன் மிருகம்
எவன் நண்பன் என்று...!

- கவிஜி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.