ஏங்கியபடியே காத்திருக்க வேண்டியிருக்கிறது
சிறுசிறு பரபரப்புடன்
கணக்கிலடங்கா தேடல்களினூடே
அவ்வாறில்லாமல் போனால்
அர்த்தமற்றுப் போகிறது
எனக்கான காத்திருப்பின் அர்த்தங்கள்
இறக்கை முளைத்த எதிர்பார்ப்புகளில்
அனைத்தையும் மீட்டெடுக்க
கட்டவிழ்த்து விடுகிறேன்
எப்போதும் உனக்காய் ஏங்கித் தவிக்கும் என் மனதை
ஒளிவு மறைவுகளின்றி
இருளைப் பிளந்து வெளியேறும் மழைக்காலமாய்
உனதருகில் வந்தமரும்
நான் எனும் விடாப்பிடியான நம்பிக்கை

- வழக்கறிஞர் நீதிமலர், மதுரை

Pin It