யாரிட்டதோ தெரியவில்லை;
சன்னதியின் சிலைக்கு நேராய்
அது கிடந்தது;
அதன்மீது ஈக்கள் அமர்ந்தமர்ந்து
பறந்த வண்ணமிருந்தன.

தெப்பத்து நீரில் மூழ்கி
மேலேறும் கால்களில்
ஈரச் சொட்டுவிடும் துணியை
முழங்கால்வரை இழுத்துப்பிடித்து
தங்களின் பூதவிரல் கொண்டு
துலக்கிய பற்கள் தெரியும்படி
முகத்தைச் சுழித்த வாக்கில்
பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும்
அவர்களின் சுழிப்பில் புடைத்த
மூக்கைப் பொத்திக் கொண்டு
அதைத் தாண்டி சன்னதி புகுந்தனர்.

அடர்கருப்பில் கெட்டியாய்
பெருமலையின்
குண்டூசி வளைவைப்போல் அது
வளைந்து வளைந்து திருகி
சன்னதி கோபுரத்தின் தோற்றத்திலிருந்தது.

- திருமூ 

Pin It