ஆடிப்பெருக்கில்
கரைபுரண்டு ஓடிவரும் புனிதநீரில்
மிதந்து வருகிறது பிரேதமென
கணவன்களின் காளையரின்
உயிர் சுவைத்த
காலி மதுப்புட்டிகளும் நெகிழிக் குவளைகளும் .
தாலிபாக்கியம் வேண்டி நீரில்
தலைமுழுகி எழுந்திருக்கையில்
மதுநெடி வீசும் நீருக்கடியில்
காலில் குத்தி கிழித்திருந்தது
ஆற்றில் குடித்து உடைத்தெறிந்த அப்பன்களின்
குரூரம்.
ஓடும் நீரிலெல்லாம் பெண்ணின் ரத்தம்.
ரத்தத்தில் மது
மதுவாய் ரத்தம்
தலைமுறையின் உயிரணு
ஊட்டும் தாய்ப்பாலில்
பெருக்கெடுத்துப் பாய்கிறது
அரசு திறந்துவிட்ட
மது அணை.

- சதீஷ் குமரன்

Pin It