பேச்சோடுதான்...
நினைவிற்கு
வருவதில்லை
ஒரு வார்த்தை கூட
என்ன பேசிக்கொண்டிருந்தோம்
இவ்வளவு நேரம்
என்று யோசிக்கும்
ஒவ்வொரு முறையும்
ஒன்றாய் அமர்ந்து
பேசிய இடங்களை
கடக்கும்
ஒவ்வொரு முறையும்
கேட்க முடிகிறது
ஒளிந்திருக்கும்
உன் சிரிப்புகளை
நீ
வெட்கப்படுவாயென
சொல்ல நினைத்திருந்ததை
சொல்ல வாய்க்கவில்லை
சொல்லப் போகிறேன்
என்றதுமே
நீ வெட்கப்படத்
தொடங்கியதால்
பேசுவதற்கென்ன
இருக்கிறது
பேசாமலே
எல்லாவற்றையும்
பேசி விட்ட பிறகு
பதில் தெரிந்தது
போலான
உன் பாவனைகளால்
கேலிக்குரியதாய்
என்
கேள்விகள்
நீ
அழைத்தும்
பதில் பேசவில்லை என்று
கோபிக்காதே
வேறெப்படி gt;
கேட்பதாம்
திரும்ப திரும்ப
உன் குரலை?
எவ்வளவோ
பேச நினைத்த
பிரிவின்
முடிவாய்
எதையுமே
பேச முடியாத
சந்திப்பு
- க.ஆனந்த்(