அவர்களுக்கு ஈவெரா.
எமக்குப் பெரியார்.
அவர்களுக்கு சாதி வெறியர்.
எமக்குப் போராளி.
அவர்களுக்கு கடவுள் மறுப்பாளர்.
எமக்கு அறிவுப் பேராசான்.

கால கால
யுத்தமிது.

அவர்கள் கைப்பற்றுவதும்...
போராடிப் போராடி
பின்
மீட்பதுமாய்...

கால கால
யுத்தமிது.

அவர்களின் நிரலின்
பாதிப்பு எங்களுக்கு மட்டும்
என்றாலும்...
எமதின் பொழுதின்
எல்லாப் பலன்களும்
அவர்களுக்கும்தான்.

உடைவதும்,
உடைக்கப்படுவதும்
வேறு வேறு.

முட்டை
உள்ளிருந்து
உடைவதும்...
வெளியிலிருந்து
உடைக்கப்படுவதும்
வேறு வேறு.

என்றாலும்...
உடைப்பது
சேதப்படுத்துவது
அவமானப்படுத்துவது
என
எல்லா வன்மத்தை
ஏவினாலும்...

வெட்டப்படுவது
தரிக்கப்படுவது
என்னவோ
விழுதுகள்தானே தவிர
அடியாழத்தில்
பற்றிவிட்ட வேர்களை என்ன செய்வாய்?

Pin It