rss gundasசாதியைத் தூக்கி
காதலைத் துரத்தும்
வேட்டைநாய் நீங்கள்தான்
அருவருப்பான அம்மணம்
தெரியுமாடா?

நள்ளிரவில் நடுக்காட்டிலும்
பயமறியா ரகசிய மென்னுணர்வு
ஊரறிய உங்கள் பற்களால்
பட்டப்பகலில் கிழிகிறதே
நியாயமாடா?

சின்னச் சினுங்கல்களும்
செல்லக் கோபங்களுமாய்
கொண்டாடும் வசந்தத்தில்
குத்தீட்டியை சொருகுவது
பெருமையாடா?

உங்கள் சீண்டலில்
மருளும் இம்மான்களின்
மனவலியும் வேதனையும்
புரியுமாடா?

முகர்ந்து அறியவும்
பாய்ந்து குதறவும்
உங்களைப் பயிற்றுவிக்கும்
வர்ணக் கயிறெது அறிவாயாடா?

இரையினைத் தேடும்
மிருகங்களின் நேர்மை
இறையினை போதிக்கும்
மிருகங்களிடம் இருக்குதாடா?

யோகி , சாது என்றால்
யோக்கியன் என்று
உன் மூட மூளையில் ஆணி அடித்த
கயவன் யாரடா?

ச்சீச்சீ
சாதியைப் புணர்ந்து
சாதியைச் சிந்தி
சாதியைப் பிரசவித்த
சாதிய வெளியில்...

சாதியை மென்று
சாதியைத் தின்று
சாதியைச் செரித்த
என் மகளின் அம்மணம்கூட
கம்பீரம் போடா!

- வெண்புறா சரவணன்

Comments

1 comment

1
Neethimalar
சிறப்பான கவிதை தோழர்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.