வீதியில் செல்லும்
யாரோ ஒருவருடைய கைகள்
எனை நோக்கி கற்கள் வீச
கச்சிதமாக இருக்கின்றன.

பாடையில் செல்லும் பிணத்தின் நாக்கு
என்னைத் தூற்றி துள்ளல் நடனமிடுகிறது
அதுவும்
பிறர் கண்கள் அறியாதபடிக்கு.

நான் கடந்து செல்லும் பாதையில்
ஒரு குளம் தானாய் நிரம்பி
வெளியேறுகின்றன
இராட்சத நீர்மத் தலைப்பிரட்டைகள்.

இதுவொரு சூனிய உலகு.

- நெகிழன்

Pin It