அணிந்திருக்கும்
முகமுடியை அவிழ்த்து வை!
என்னால் இயல்பாக
இருக்க இயலவில்லை!

எது உன்முகம் எனத் தேடி தேடி
தீர்ந்து போகிறது என் அறிவு!
உள்ளன்போடும், உன்முகத்தோடு
உன்னை எனக்குக் காட்டு!

கழட்டிக் கழட்டி மாற்றுகிற முகமுடியுள்
காணாமல்தான் போகக்கூடும்
உன் முகமும்

இயல்பாயிரு
எனக்கான
உன் முகத்தோடு!

- இசைமலர்

Pin It