lonely toyநகப்பூச்சு புட்டியொன்று
மேசைமீது
வைக்கப்பட்ட இடத்திலேயே இருக்கிறது
சாவிக்கொத்தில்
தொங்கும் கரடி பொம்மையை
வயிற்றில் அழுத்த
அழும் சத்தமும் கேட்கவில்லை
டீபாயில்
வண்ண அடிப்பான்களைப்
பரப்பிவிட்டிருக்கிறேன்
அவைகளின் மூடிகள் கழன்று
காற்றில்
காய்ந்து கொண்டிருக்கவுமில்லை
துணி அலமாரியில்
புதிதாக வாங்கிவந்து ஒட்டிய
டிஸ்னி ஃப்ரோஷான் குழுவினர்
தங்களின் திறமைகளை
எத்தகு இடையூறுமின்றி
முழுமையாக வெளிப்படுத்துகிறார்கள்
பின்வாசல் கதவு
பாதி அடைத்துவைக்கப்பட்ட
யோகநிலையில்
ஒரு நீண்ட ஒளிக்கீற்றோடு
ஐக்கியமாகி வெகுநேரமுமானது
எதிர்த்துப் பேச ஆளின்றி
சுர்ரென்று எழும் கோபத்திற்கும்
வேலையில்லை
அங்கும் இங்கும் எங்கும்
ஒரு இல்லை ஆமென்றும்
ஒரு ஆம் இல்லையென்றும்
இடம்மாறி ஏங்கிய போது
அவ்வீடு குட்டியம்முவை இழந்து உயிரற்றவைகளாகின.....!

- புலமி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.