நீரிடை சீறி காற்றைக் கிழிக்கும் 
சித்துக்கல் போல் இலக்கடைந்திருந்தது 
"போட்டி அறிவிப்பு"
நகரின் முக்கிய வீதி இஸ்திரிக்காரர்கள் 
நடமாடும்,பேசும் பதாகைகளாகி 
மூலை முடுக்கிலும் கொண்டு சேர்த்திருந்தார்கள்
அச்செய்தியை 
எச்சில் தெறிக்க அவர்கள் மொழியும் 
பரிசுத் தொகைக்கு மயங்காதோரில்லை 
பரிசுத் தொகை வானமென விஸ்தரிக்க 
போட்டிக்குள் நுழையும் ஆசைகள்
எங்கும் கொழுந்துவிட்டு எரியத்துவங்கின 
வெத்து வேட்டுக் கூட்டத்தில் சிக்கி 
விழிபிதுங்கியது விழாக் கமிட்டி 
"போட்டி" ஒரு அரசனின் கால்மிதியாகவும் 
"பரிசு" அவனமரும் சிம்மாசனமாகவும் 
காட்சி தந்த நிலை அந்தோ பரிதாபம் 
போட்டியானதைப்போல் கேட்பாரற்று 
சுணங்கிக் கொண்டிருந்தது அன்று கொண்டாடப்
படவேண்டிய பெருமழையும்..!

- சுஜய் ரகு

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.