காகிதத்தைத் தழுவி
நழுவப் பார்க்கிறது
மழலையின் ஆசைகள்
கப்பல்களாய் உருமாறி...

மழை விட்ட கணத்தோடு
கப்பல் விடும் களமும்
சேர்ந்து காட்சி
மிகைகளாகி விடுகிறது.....

புனித பிரபஞ்சத்தின்
நீராடலின் இறுதியில்
கரைசேர்ந்து விடுகிறது
காகிதக் கப்பல்கள்....

புரட்டாத பக்கங்களும்
பிடிவாத சொற்களுக்குள்
கப்பலாகி விடுகிறது....

இப்படியாய்
மண்ணில் சொர்க்கத்தை
சேகரித்துக் கொண்டிருக்கிறது
மழையும், மழலையும்....

- ஆனந்தி ராமகிருஷ்ணன், சிதம்பரம்

Pin It