lonely lady

வருத்தம் வாடி,
மூர்ச்சையாகும் தருணங்கள்
கரையட்டும் என
தடங்களின் தாக்கங்கள்
கலந்தே செய்கிறது....

விம்மி அழும் வனந்திரத்தின்
பாழ்வெளிகள் கரை தாண்டியும்
காட்சிக்குள் தவறி
கவனம் மறுக்கிறது.....

விழியோரத்தில் வந்துபோகும்
கனவுகளின் வரவுகளுக்கு
புரிவதில்லை...
யாருமற்றவளை
சிறகொடிக்கிறோம் என.....

நினைவுகளின்
துடிப்புகளில் அடங்கி
மீண்டும் கிளர்ந்து
எழுகையில் மிச்சப்பட்ட
ரணங்களாகவே
சில கணங்கள்....

இறுதிவரை
தேடாமலே
காணக் கிடைக்கும்
கானகம் ஒன்றினுள்
தடதடத்துக் கொண்டிருக்கும்
மனதின் ஓசைகளோடு
படபடத்துக் கொண்டிருக்கிறேன்.
காரணமின்றியே,
யாரும் அற்றவளென....

- ஆனந்தி ராமகிருஷ்ணன், சிதம்பரம்

More articles by ஆனந்தி ராமகிருஷ்ணன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.