man on beach

இன்று ஒரு நாள் மட்டும்

அதிகாலையில் எழுந்திருங்கள்

பறவைகளின் பாடல்களைக் கேளுங்கள்

வீட்டு தோட்டத்தில்

ரோஜா ஒன்றை பதியனிடுங்கள்

தேநீர் தயாரித்து மனைவியை எழுப்புங்கள்

பரம பதம் சதுரங்கம் கேரம் மட்டைப் பந்து

ஏதோ ஒன்று

குழந்தைகளுடன் கொஞ்சம் விளையாடுங்கள்

தயவு செய்து

கவிதை எழுத வேண்டாம்

ஒரு இயற்கை காட்சியை

வரைந்து பாருங்கள்

தேர்ந்தெடுத்த சிவாஜி படப் பாடல்களை

பதிவிறக்கம் செய்து

எம்பி 3 பிளேயருடன்

தந்தைக்கு பரிசளியுங்கள்

அம்மாவை  மருத்துவமனைக்கு

அழைத்துச் செல்லுங்கள்

கீரைக்கட்டு  கொண்டு வரும் மூதாட்டிக்கு

பருத்திப் புடவை ஒன்றை பரிசளியுங்கள் 

சிறிய பிணக்கில்

நீண்ட நாள் பேசாமல் இருக்கும்

நண்பனுக்கு போன் செய்து பேசுங்கள்

இரவில் பூத்துள்ள

அனந்த சயனப் பூவை

தேடிச் சென்று பாருங்கள்

மொட்டை மாடிக்குச் சென்று

நட்சத்திரங்களுடன் பேசுங்கள்

கடைசியாக 

படுக்கைக்கு செல்லுங்கள்

இன்று ஒரு நாளாவது

பதின்ம வயது காதலியை நினைக்காமல்

நன்றாக தூங்குங்கள்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.