lady with tearsஇருள் தின்னும்
மாலை மௌனித்ததொரு
கணப் பொழுதில்

பச்சைக் காய்கறிகளும்
நிறம் மாறாப் பூக்களும்
விலைபேசி விற்றுத்
தீர்ந்து கொண்டிருக்க

தெருவில் நாறும் வேசியவன்
தனங்களின் இடைவெளியை
உற்று நோக்கிய
அருவருப்பில்

உருண்ட
சதைக் கோளங்களைப்
பிய்த்தெடுத்து ரத்தம்
சொட்டச் சொட்ட
வழித்து அவன் முகத்தில்
விட்டெறிந்த போது

பிண வாடையை
முகர்ந்து மூச்சிலேற்றி
வெறி தீர்த்து
செத்துக் கொண்டிருந்தது
வன்புணர் மிருகம்!

அப்போதும்,
அதே மாலை
கவ்விய இருட்டோடு
சப்தம் தொலைத்து
மறைந்து கொண்டிருந்தது....

சதை பிறழ்ந்த
வெற்றுத் தனங்களை
உற்று நோக்குகின்றன
மீண்டும் அதே
வெறிப் பார்வைகள்..

விருட்டென்று அலறி எழுந்த போது
என் தாமரை மொட்டுக் கரங்களில்
இரத்த ரேகைகள்
வ(ரை)ளர்ந்திருந்தன!

- கார்த்திகா

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.