நானும் அவனும்
வரைந்து கொண்டிருந்தோம்
எங்கள் வாழ்க்கையை
கடற்கரை மணலில் 

அவன் இரவு வரைந்தான்
நான் நிலவு வரைந்தேன்
அவன் வீடு வரைந்தான்
நான் மொட்டை மாடியும்
சில பூக்களும் வரைந்தேன்
அவன் சில நட்சத்திரங்களை
அள்ளித்தெளித்தான்
நான் ஊஞ்சல் வரைந்தேன் 

இங்கே சில பூந்தொட்டிகள்
அங்கே நம் பிள்ளை
அதோ அங்கே இந்த வண்ணம்
இன்னும் சில சொன்னான்.. 

அவன் நினைத்ததுபோல்
வரவில்லை போலும் 

தூரிகை பிடுங்கி
ஓவியம் முடித்தான்
அங்கே நாங்கள் இல்லை
அவன் மட்டுமே இருந்தான்! 

- செ.சுபாஷிணி

More articles by செ.சுபாஷிணி

Comments

1 comment

1
பகவன்
அங்கே நாங்கள் இல்லை
அவன் மட்டுமே இருந்தான்!
// அருமை...

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.