old lady 265நிகழ்பொழுதின் நிசப்தத்தில்
ப்ரைட்லிங்கின் முள்ளிசையினூடே
நேர்த்தியாய் அழுத்தப்பட்ட
பீட்டர் இங்கிலாந்தின்
மேல்சட்டைக்குப் பொருந்திய
ஆலென்சோலி காற்சட்டையுடன்
தள்ளுபடியின் புதுவரவில்
நயமான நைக்கியின்
வெளிர்மஞ்சள் காலணிகளுடன்
மேசையின் ரேபானில்
நகைக்குமென் பிம்பங்களை
சிரத்தையின்றித் தவிர்த்து
நானும்
எழுதிக் கொண்டிருக்கிறேன்
எழுச்சிக்கான
கவிதையொன்றை.


கை நிறையும் புன்னகை

மூன்றிலக்கத் தாளுடன்
கடனட்டை எதுவும்
தேவையாயிருந்ததில்லை
நாலணாவோ எட்டணாவோ
பைதுழாவி பள்ளிவாசல்
பாட்டியிடங் கொடுத்தால்
கூடையில் வாங்கிப் போட்டு
முகுமுருவி கொஞ்சித்
தருவாள் கைநிறையும்
நெல்லிக்காய்களுடன்
பழுத்த புன்னகையையும்.

Comments

1 comment

1
seyon yazhvaendhan
கவிதைகள் அருமை தோழர்!

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.